பெண்களுக்கு அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்... ‘மகளிர் மதிப்பு திட்டம்’ பற்றி முழுமையா தெரிஞ்சுக்கோங்க!


பெண்களுக்கான சிறப்பு திட்டமாக தபால் நிலையத்தில் 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' என்ற பெயரில் அசத்தலான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மகளிர் மதிப்பு திட்டம் 31.3.2025 வரை அமலில் இருக்கும். பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைத்து மகளிரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும்.

மகளிரின் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக புதிதாக 'மகளிர் மதிப்பு திட்டம்-2023' எனும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு மற்றும் அடுத்த கணக்குக்கான இடைவெளி 3 மாத காலமாகும்.

இத்திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் அதே கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும். ஓராண்டுக்கு பிறகு இருப்புத்தொகையில் 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ள முடியும்.

கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும். இந்த திட்டம் தொடங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலேயே சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஏற்கெனவே அஞ்சலத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள், திட்டத்திற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, ஃபான் கார்டு எண் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படங்களைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் புதிய சேமிப்பு கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தொடங்கி பயன்பெற முடியும். மிஸ் பண்ணாம உடனே உங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் சென்று முழு தகவலையும் கேளுங்க. தனியார் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறுவதை விட, உங்க பணம் அஞ்சலகத்தில் பாதுகாப்பாக இருக்கும்.

x