அதிகரிக்கும் கொரோனா! மாஸ்க் கட்டாயம்; மீண்டும் ஊரடங்கு அபாயம்


கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இனி நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கர்நாடகா பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி இருந்தது. முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியது. கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்தியாவில் கேரளாவிலும் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல் கேரளாவிலும் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் அனைத்து மாநில அரசுகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இது குறித்து விவாதித்தார். அப்போது கொரோனா பரவாலை கண்காணிக்கவும் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ கட்டமைப்பை உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிகுறிகள் உள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், கை கழுவுதல், தனி நபர் இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணை நோயாளிகள், கர்ப்பிணிகள், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x