பலமான இதயமே எதையும் தாங்கும் இதயம் | உலக இதய தினம் ஸ்பெஷல்


ஐயோ, நெஞ்சு வலி என்று இப்போது யாரும் அவ்வளவு சிரமப்படுவதில்லை. எந்த வொரு அறிகுறியும் இல்லாமல் நிகழ்ந்து விடுகிறது மரணம். அதுவும் இளம் வயதில். இதற்கு இன்று இளைய தலைமுறையினரிடம் ஊடுரு விக் கொண்டிருக்கிற போதை பழக்கம், மது, புகையிலை பழக்கம், உடற் பயிற்சியின்மை, துரித உணவுகள் உட்கொள்வது போன்ற வையே முக்கிய காரணியாக உள்ளன.

மற்றொன்று பரம்பரை இதய நோய். இவை ஒரு குறிப்பிட்ட மரபணுவிலிருந்து வருவதில்லை. மாறாக பலதரப்பட்ட மரபணு மூலமாக நோய் வளரும் அபாயத்தை அதிகரிக்கும். இதய மருத்துவரை அணுகினால் உங்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். இப்போது எல்லாம் மாரடைப்பு வருவதற்கு நாம் இன்னொரு வழியையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். அதிக மன அழுத்தம், அதிக வேலைப்பளு, மாணவர்களிடத்தில் படிப்பு சுமை.

அதுவும் இது போட்டி உலகம் ஆகிவிட்ட காரணத்தால் போட்டி தேர்வும் அதிகமாகிவிட்டது. பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின் கூற்றுபடி தகுதி உள்ளவைகள் பிழைத் துக்கொள்ளும். இந்த தகுதிக்காக மாணவர்கள் தங்களது தூக்கத்தை தொலைத்துக் கொள்கிறார்கள்.

மதிப்பெண் களை நோக்கி தங்களது இதயத்தை அழுத்துகிறார்கள். அதேபோல பல்வேறு துறை களில் வேலைகளில் இருப்பவர்கள் இலக்கு நிர்ணயிக்கும் போது தூக்கம் இல்லாமல் உடலை சிரமப்படுத்துகிறார்கள். இன்று வெவ்வேறு துரித உணவுகளை சந்தைப்படுத்தி, பல நுட்பமான வியாபார தந்திரத்தால் பல இளம் இதயங்கள் கொத்தடிமை களாகி வருகின்றன.

சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது, சுகாதாரம் இல்லாமல் சமைப்பது போன்றவற்றால் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் என்னும் கொழுப்புப்புரதம் நம் உடலில் அதிகமாகி ஆர்த்ரோஸ்கிலிரோசிஸ் (பெரும் தமனி தடிப்பு) என்னும் நோய் உருவாகிறது. உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவை தினமும் உட்கொள்ளும் உணவு போன்று நம் வாழ்வில் ஓர் அங்கமாக இருத்தல் வேண்டும்.

ஐ. டி. நிறுவனங்களில் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வது கிடையாது. எப்படி இந்த அவலங்களை தவிர்ப்பது என்பது பொதுவாக எல்லோர் மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது. மருத்துவத்தின் தந்தை ஹிப்போ கிரேட்ஸ் உணவே மருந்து என்கிறார். இதை விட மேல ஒரு படி கடந்து நடப்பது ஒரு மனிதனுடைய அருமருந்து என்கிறார்.

தினமும் நம் உணவில் காய்கறிகளையும், கனிவகைகளையும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஒரு நாளில் குறைந்தது 6 மணி நேரம் தூக்கம் இருக்க வேண்டும். நோய் உபாதைகள் உள்ளவர்கள் உடற்பயிற்சியை ஒவ்வொரு படிநிலைகளில் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். மனஅழுத்தத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். நமது உடலை வருடம் ஒரு முறையாவது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

புகைத்தல் மற்றும் மதுவிலிருந்து விலகியே இருத்தல் வேண்டும். இவைகளை நாம் கடைபிடித்தால் நம் இதயத்தை சீராக வைத்திருக்க இயலும். பலமான இதயமே எதையும் தாங்கும் இதயம்.

x