இந்தியாவின் ஏற்றுமதி தடையால் அமீரகத்தில் எகிறிய வெங்காய விலை


அமீரகத்தில் வெங்காய விற்பனை

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடை காரணமாக, இந்திய வெங்காயத்தை நம்பியிருந்த அமீரகத்தில் வெங்காயத்தின் விலை பன்மடங்கு எகிறியுள்ளது.

இந்தியாவில் வெங்காயம் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் 2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. நாடு முழுவதும் பருவம் தவறிய மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் விளைவிக்கப்பட்டு வருகிறது.

வெங்காயம்

இங்குள்ள விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து, மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்தது. எனவே வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவரவும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கவும், மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் முதல் வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கப்பட்டது.

ஆனபோதும் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரவில்லை. எனவே 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவால், இந்திய வெங்காயத்தை எதிர் நோக்கியிருக்கும் வெளிநாடுகளில் அதன் விலை வெகுவாக எகிறத் தொடங்கியது. குறிப்பாக அமீரகத்தில் வெங்காய விலை அதிகபட்சமாக 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

வெங்காயம்

அமீரகத்தில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இந்தியர்களின் மத்தியில் இந்திய வெங்காயத்துக்கான தேவை அதிகரித்ததும், அதன் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு ஒரு காரணமானது. இந்தியாவுக்கு அப்பால் பாகிஸ்தான், ஈரான், துருக்கி மற்றும் சீனாவில் இருந்தும் வெங்காயத்தை அமீரகம் இறக்குமதி செய்கிறது. ஆனபோதும் இந்திய வெங்காயத்தின் தரத்தை இதர நாடுகளின் வெங்காயத்தால் ஈடு செய்ய முடியவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

x