டெரர் காட்டும் டெங்கு... தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!


டெங்கு கொசு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை

கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சல் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 6 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல திருவண்ணாமலையில் 5 பேரும், கும்பகோணத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

x