தங்கத்தின் விலை தொடர் சரிவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!


டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் 5,720 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 45,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 6,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 49,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

தங்கத்தை போலவே வெள்ளியும் இன்று விலை குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x