75,00,000 இலவச காஸ் இணைப்புகள்! மத்திய அரசு அதிரடி!


75 லட்சம் இலவச காஸ் இணைப்பு வழங்க ஒப்புதல்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிதாக 75 லட்சம் ஏழைகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் இலவச காஸ் இணைப்பு வழங்கவும், இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கவும் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜி20 மாநாட்டிற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாகவும், டெல்லி பிரகடனம் என்ற உக்ரைன் தொடர்பான கூட்டறிக்கை இந்தியாவின் பலத்தை நிரூபிப்பதாக உள்ளதாகவும் கூறினார். மேலும், பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யவும், 3 ஆண்டுகளில் 75 லட்சம் காஸ் இணைப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

x