நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை!


தங்கம்

கடந்த சில தினங்களாக மெல்ல விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று மேலும் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 45,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,720 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 6,190 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 49,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,700 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

x