குட்நியூஸ்... பஸ்களில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்- அரசு பரிசீலனை


டெல்லியில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சேவையை பின்பற்றி, வாட்ஸ்அப்பில் பஸ் டிக்கெட் பெறும் வசதியை விரைவில் நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

டெல்லியில் அரசுப் பேருந்துகளில் பயணிக்க டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெறும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மெட்ரோ ரயில் காப்பரேஷன் லிமிடெட் (டிஎம்ஆர்சி) ஏற்கெனவே வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியானது, குருகிராம் ராபிட் மெட்ரோ உள்ளிட்ட இதர மெட்ரோ ரயில் சேவையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப்பில் டிக்கெட் பெறும் வசதியை போல், டெல்லியில் அரசுப் பேருந்துகளிலும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதிகளை நடைமுறைப்படுத்தும் பணியில் அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வாட்ஸ் அப்பில் டிக்கெட் பெறும் வசதி

மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பிலிருந்து ‘Hi' என டைப் செய்து 91 9650855800 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வரும் நடைமுறைகளை பின்பற்றி டிக்கெட் பெறலாம் அல்லது பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அதன்மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. வாட்ஸ் அப் மூலம் பெறும் டிக்கெட்டை கேன்சல் செய்ய இயலாது. மேலும் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் செலுத்தினால் அதற்கு குறி்ப்பிட்ட கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது.

x