சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா: மீண்டும் ஊரடங்கா?


சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் கொரோனா பரவல் உருவாகியுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவில் இருந்து பல நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதும் சில நாடுகளில் கொரோனா இன்னும் முழுமையாக விலகவில்லை. இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூர் மக்கள்

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32,035 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த வாரத்தை விட 10 ஆயிரம் அதிகமாகும். இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கடைபிடிக்குாறு அந்த நாட்டின் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இருப்பினும் மீண்டும் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் சாத்தியமில்லை எனவும், மக்கள் அனைவரும் சுயபாதுகாப்புடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, அண்டை நாடான மலேசியாவிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

x