பெண் குழந்தைகளுக்கு அசத்தலான சேமிப்பு திட்டம்! ரூ.250 முதலீட்டில் ரூ.67 லட்சம்!


பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் 250 ரூபாய்க்கு கணக்கு தொடங்கி முதலீடு செய்தால் 67 லட்ச ரூபாய் ரிட்டன் பெற முடியும்.

'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' என்ற பரப்புரையின் கீழ் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது.

பெற்றோர் தங்கள் மகளின் எதிர்காலத்தை திட்டமிடும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 சதவீத வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் தனி நபர் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். டெபாசிட் தொகை 21 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும்.

ஒரு நபர் குறைந்தபட்சம் 250 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருடாந்திர பங்களிப்பை செய்யலாம். இதற்கு பெண் குழந்தை இந்தியராக இருக்க வேண்டும். மகள் 10 வயதை அடையும் வரை இந்த கணக்கை தொடங்க முடியும்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் பெற்றோர் முதலீடு செய்தால், கணக்கு முதிர்ச்சியின் போது ரூ.67.3 லட்சம் வரை ரிட்டன் கிடைக்கும். பெண் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

x