ஜி 20 மாநாடு... உலகப்பெரும் தலைவர்களை ஈர்த்த சிறுதானிய உணவு


ஜி 20 மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் உலகத் தலைவர்களுக்கு இந்தியா பரிமாறிய சிறுதானிய உணவுகள் வரவேற்பு பெற்றிருக்கின்றன.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, நடப்பு 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐநா அமைப்பு அங்கீகரித்து அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சிறுதானியத்தின் பெருமையை பறைசாற்றும் போக்கில், சிறுதானியங்களைக் கொண்டு பல்வேறு உணவுப் பதார்த்தங்களை சமைப்பது மற்றும் அவற்றின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நடவடிக்கைகளில் இந்த ஆண்டின் முதல் முதலே இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதன் தொடச்சியாக ஜி 20 மா நாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கும் சிறுதானிய ரகங்கள் கொண்டு சுவையான உணவு மற்றும் சிற்றுண்டிகள் அபரமான சுவையுடன் பரிமாறப்பட்டு வருகின்றன. உலகத் தலைவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் மதியம் மற்றும் இரவு உணவுகளில் சிறுதானியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒடிசா மாநிலத்தின் பழங்குடி பெண்கள் அமைப்பினர் சேகரித்து வழங்கிய இந்த சிறுதானியங்கள், சுவையிலும், சத்துக்களின் சேர்க்கையில் ஈடு இணையற்றது. விருந்தினர்களுக்கு சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன், அவற்றின் பின்னணி, சிறப்பியல்புகளும் விவரிக்கப்பட்டன.

இங்கிலாந்து, துருக்கி, ஜப்பான் ஆகிய நாட்டுத் தலைவர்களின் மனைவியர் மத்தியில் சிறுதானிய உணவுகளுக்கு வெளிப்படையாக வரவேற்பு வந்திருக்கிறது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறப்பு சிறுதானிய பதார்த்தங்களை சமையலர்கள் பரிமாறி உள்ளனர்.

x