சுற்றுலாப் பயணிகளுக்கு அலர்ட்! 3 நாட்களுக்கு தொட்டபெட்டா செல்லாதீங்க!


தொட்டபெட்டா மலை சிகரம்

ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டபெட்டா

மலைகளின் அரசியாக விளங்குவது நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் ஆகும். சுற்றுலாப் பயணிகளால் ஊட்டி என அழைக்கப்படும் இங்கு கோடைகாலங்களில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் என்றாலும், மற்ற காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் குறைவான எண்ணிக்கையில் சென்று வருகின்றனர்.

இங்குள்ள பல்வேறு காட்சி இடங்களில் சிறப்பு வாய்ந்தது தொட்டபெட்டா சிகரமாகும். ஊட்டியின் உயரமான இடத்தில் அமைந்துள்ள மலை சிகரத்திற்கு சென்று இயற்கை அழகையினையும், மேக கூட்டங்கள் தழுவி செல்வதையும் அனுபவிப்பது புதுவித அனுபவமாக இருக்கும்.

தொட்டபெட்டா செல்லும் சாலை

இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 10,11,12 ஆகிய 3 தினங்கள் இங்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

x