பயணிகள் மகிழ்ச்சி... சென்னை புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் சேவை தொடங்கியது!


மின்சார ரயில்

சென்னை மூர் மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவை சீரானதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் பெய்த மழையால் நீரில் மிதந்த தண்டவாளம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் முழ்கின. குறிப்பாக பேசின்பிரிட்ஜ் - வியாசா்பாடி இடையே உள்ள பாலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கான முக்கிய பாலமாகும்.

இதில் அபாய அளவை தாண்டி மழைநீர் தேங்கியதால் சென்னை வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தமிழக அரசு துரித நிவாரண நடவடிக்கையில் இறங்கியது.

இதன் காரணமாக தற்போது நிவாரணப் பணிகள் நிறைவடைந்து உள்ளது. இதனால் சென்னை மூர்மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் 1 மணி நேர கால இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.

இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வழக்கம் போல ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x