இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!


தங்கம்

கடந்த சில தினங்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,160 விற்பனையாகிறது.

நேற்று தங்கம் ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,520 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,160 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5,990 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 47,990 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலையில் நேற்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 1 ரூபாய் காசுகள் குறைந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

x