சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்; கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வாக்கத்தான் போட்டி

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில், ஆட்டிசம் குழந்தைகள், சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

உலகம் முழுவதும் டிசம்பர் மூன்றாம் தேதி, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக கோவை கொடிசியா மைதானத்தில் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வாக்கத்தானில், சிறப்புக் குழந்தைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கும், பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வாக்கத்தான் போட்டி

கோவை கொடிசியா மைதானத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு, சிறப்புக் குழந்தைகளுக்கும், கொடிசியா மைதானத்தில் இருந்து விளாங்குறிச்சி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பெற்றோர்களுக்கும் வாக்கத்தான் நடைபெற்றன. இதில் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏராளமானவர் பங்கேற்றனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் வாக்கத்தான் போட்டி

இந்த நிகழ்ச்சியில் கெளமார பிரசாந்தி அகாடமி சார்பாக, மாற்று திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் மேபாட்டுக்கு தேவைப்படும் பயிற்சி தருவதற்கென யாஸ்யா எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் வாரம் தோறும் வீடுகளுக்கே சென்று இலவசமாக விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தர இத்திட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கௌமார பிரசாந்தி அகாடமியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கெளமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சக்தி மசாலா நிறுவன இயக்குனர் சாந்தி துரைசாமி, பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பாரா ஒலிம்பிக் வீரரும் ஆசிய போட்டியில் தங்கம் வென்றவருமான முத்துராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

x