குட்நியூஸ்... குளிர்காலத்தில் இந்த உணவு வகைகளை மிஸ் பண்ணாதீங்க!


வண்ணமயமான பழங்கள்

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உங்களை நீங்கள் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க முடியும்.

மழை

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த பல மாதங்களாக நிலவி வந்த வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், குளிரின் அளவு அதிகரித்துள்ளது.

குளிர்காலம்

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் முழுவதும் குளிர்காலமாகும். பிப்ரவரி மாதத்திலும் லேசான குளிர் இருக்கும். இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகளைத் தேடி உண்ணுவதன் மூலம் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க முடியும்.

ஆரஞ்சு

எனவே, நீங்கள் குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் உணவில் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சேர்க்க வேண்டும்.

ஏனெனில் இது நம் கண்கள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவதால் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவை கிடைக்கின்றன.

ஆப்ரிகாட் ஜூஸ்

அத்துடன் குளிர்காலத்தில் கேரட், பப்பாளி, ஆப்ரிகாட் மற்றும் ஆரஞ்சு போன்ற வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்கும். குளிர்காலத்தில் நீங்கள் கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள வைட்டமின்கள் குறைபாட்டை ஈடுசெய்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். பழங்களை நீங்கள் ஜூஸாகவும் சாப்பிடலாம்.

எனவே, குளிர்காலத்தில் வண்ணமயமான பழங்கள் நம் வாழ்க்கையை ஆரோக்கியமானதாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

x