வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்: 2 நாட்களாக உணவில்லாமல் தவிக்கும் மாதவரம் மக்கள்!


மாதவரம் பகுதியைச் சூழ்ந்த வெள்ளத்தில் நீந்தி வேலைக்குச் செல்லும் ஊழியர்.

சென்னையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று மழை தணிந்துள்ள நிலையில், மேற்கு மாம்பலம், தி.நகர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேற்கு மாம்பலம்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், மந்தைவெளி, அம்பத்தூர், அண்ணாநகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சாலையில வெள்ளம்

வெள்ளம் வடியாத காரணத்தால் மக்கள் வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளநீர் வடியாததால் மின்சாரம் பல இடங்களில் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தியாகராயநகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாதவரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்ததால் இரண்டு நாட்களாகவே உணவு இல்லாமல் கட்டிடங்கள் மூழ்கியுள்ளன. இதனால் குடியிருப்புவாசிகள் மாடியில் தங்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகம் செல்பவர்கள் ஆபத்தான நிலையில் இடுப்பளவு தண்ணீரில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


x