குற்றாலம்... ஐந்தருவியில் குளிக்கத் தடை! திடீர் மழையினால் வனத்துறை நடவடிக்கை!


குற்றாலம் ஐந்தருவி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் திடீர் மழை பெய்து வருவதால் குற்றாலம் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஐந்தருவி

கேரள பகுதிகளில் வழக்கமாக பெய்யும் மழை இந்த ஆண்டு முழுமையாக பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு குற்றால சீசன் களையிழந்தே காணப்பட்டது. இதனால் குற்றால அருவிகளில் நீராட சென்றவர்களில் பெரும்பான்மையோர் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீர் மலை பெய்தது. இதையடுத்து குற்றால அருவிகளில் திடீர் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குற்றாலம் ஐந்தருவியில் அதிக அளவில் விழுவதால் அங்கு குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் குற்றம் சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

x