நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல்... தங்கம் விலை குறைந்தது!


தங்கம்

ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து விற்பனையானது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,870 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,960 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 5,865 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,920 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 6,335 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 50,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி கிராம் வெள்ளி 82.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 82,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

x