அய்யய்யோ.... இந்தியர்கள் தூங்குவது இத்தனை மணி நேரம் தானா?:எச்சரிக்கும் மருத்துவர்கள்!


உறக்கம்

கடந்த 12 மாதங்களில் 61 சதவீத இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உறக்கம்

ஒரு மனிதனின் உடம்புக்குக் காற்று, தண்ணீர், உணவு ஆகியவை எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்குத் தூக்கமும் அவசியம். நமது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது. இந்த முக்கியமான செயலில் நாம் கவனம் செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். தூக்கத்தின் மொத்த நேரத்தைவிட ஆழ்ந்த தொடர் தூக்கம்தான் மிகவும் அவசியம். தினமும் 7 மணி முதல் 9 மணி நேரம் தூங்குபவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தான், உறக்கத்தின் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் சர்வதேச தூக்க தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தியர்களின் தூக்க நேரம் குறைந்து வருவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கை மணி அடிக்கிறது. இதனால் மனித மனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், இதனால் இதயம் மற்றும் மூளைநோய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

உறக்கம்

கடந்த 12 மாதங்களில் 61 சதவீத இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியுள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது, இது நாட்டில் தூக்கமின்மை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. தூக்கமின்மை ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இது இரவுநேர உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உறக்கம்

இதுகுறித்து பி.டி. ஹிந்துஜா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். லான்சலோட் பின்டோ கூறுகையில், " மோசமான சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை தூக்கத்தின் தரத்தில் ஏற்படும் தாக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார். டிபியு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ் நிர்ஹலே கூறுகையில்," தூக்கமின்மை நினைவாற்றல் பிரச்சினை, மனநிலை மாற்றம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக குறைந்தது 7 மணிநேரம் தரமான தூக்கத்தைப் பெறுவது அவசியம் என்ற மருத்துவ நிபுணர்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

x