குட் நியூஸ்... விவசாயிகளுக்கு இனி ரூ.8,000... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!


விவசாயி

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு பி.எம். கிசான் (PM KISAN) எனப்படும் பிரதான் மந்திரி சம்மன் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத் திறனை அதிகரிக்கும் வகையில் தகுதியுள்ள விவசாயிகளைத் தேர்வு செய்து நிதி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக 4 மாத இடைவெளியில் தலா ரூ.2 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தவணைத்தொகை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

தற்போது இந்த தொகையை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி நிதி உதவி தொகையை ரூ.2 ஆயிரம் அதிகரித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை 4 தவணைகளில் ரூ. 8 ஆயிரம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகள் பெறும் ஆண்டுத் தொகையை மத்திய அரசு உயர்த்தலாம் என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் தொகை மூன்று தவணைகளாக ரூ.6,000 ஆகும். இத்தொகையை உயர்த்தி வழங்க விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தான், இந்த கோரிக்கையை மனதில் வைத்து அரசாங்கம் தற்போது இந்தத் தொகையை 50 சதவீதம் அதாவது ரூ.2000 முதல் ரூ.3000 வரை உயர்த்தக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியை உயர்த்துவதற்கான பரிந்துரையை பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவை அரசு ஏற்றுக்கொண்டால், இதன் மீது ஆண்டுக்கு 20,000- 30,000 கோடி ரூபாய் நிதி சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஆனாலும், நிச்சயம் இந்த தவணைத்தொகை உயர்த்தப்படும். ஆனால் எப்போது விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிகளவு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு தயாராகி வருகிறது.

x