ஆறுதல் அளித்த தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.320 விலை குறைந்தது!


தங்கம் விலை சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த நிலையில், இன்று கிராமருக்கு 40 ரூபாய் சரிவைச் சந்தித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 2ம் தேதி கிராமிற்கு 100 ரூபாய் அதிகரித்திருந்தது. இதைத் தொடர்ந்து சற்று சரிவை சந்தித்த தங்கத்தின் விலை, பின்னர் மார்ச் 5-ம் தேதி துவங்கி 9-ம் தேதி வரை 5 நாட்களில் 220 ரூபாய் உயர்வை சந்தித்திருந்தது. இது சவரனுக்கு 1760 ரூபாயாக உயர்ந்திருந்தால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆபரணத் தங்கம்

கடந்த மார்ச் 10-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 6,150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வர்த்தக நேரம் துவங்கியதிலிருந்தே, தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையத் தொடங்கியது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 6,110 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.320 விலை குறைந்து 48 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

இதே போல் வெள்ளியின் விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று 79 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ஒரு ரூபாய் குறைந்து 78 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 78 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

x