ஒரே நாளில் புதுக்கோட்டையில் 59 பேருக்கு டெங்கு: மதுரையில் 19 பேர் பாதிப்பு!


டெங்கு

தமிழகத்தில் பருவமழைத் தொடங்கி வெளுத்து வாங்கி வரும் நிலையில், அது சார்ந்த நோய் பரவல்களும் அதிகரித்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும், காலநிலை மாற்றம் காரணமாகவும் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் காரணமாக அரசு, தனியார் என மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூடி வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல மதுரை மாவட்டத்திலும் டெங்குவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்று மட்டும் 19 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

x