குன்னூர் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்


குன்னூர்: குன்னூர் மகளிர் கல்லூரியில் ஆடல் பாடலுடன் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் திருவிழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும், பூக்கோலம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னூரில் தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பில், கோலாகலமாக ஓணம் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில், மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து வந்து மாவேலியை வரவேற்கும் விதமாக பல்வேறு, வண்ண பூக்களால் அத்திப் பூ கோலமிட்டனர்.

ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவிகள் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடினர். கல்லூரியில் மத ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது மகிழ்வாக இருந்ததாக மாணவிகள் கூறினர்.

x