மகளிர் தினத்திற்கு தொல்லியல் துறையின் சர்ப்ரைஸ் அறிவிப்பு.. சுற்றுலா பயணிகள் இன்ப அதிர்ச்சி!


மாமல்லபுரம்

சர்வதேச மகளிர் தினமான இன்று மாமல்லபுரம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.

மகளிர் தினம்

இந்த நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி, பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், சென்னை அருகே உள்ள சுற்றுலா தலங்களில் புகழ்பெற்று விளங்கக் கூடியது மாமல்லபுரத்தை இன்று ஒரு நாள் மட்டும் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், புளிக்குகை, வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு ஆகிய சுற்றுலா தலங்களை தினந்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர். இவைகளை சுற்றிப் பார்க்க வெளிநாட்டினருக்கு ஒரு நபருக்கு 600 ரூபாய் எனவும் உள்ளூர் பகுதி மக்களுக்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயித்து தினந்தோறும் அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x