அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை... கலக்கத்தில் இல்லத்தரசிகள்!


தங்கம்

கடந்த சில தினங்களாக எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனையான தங்கத்தின் விலையில் இன்று அதிரடியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று எந்த விதமான மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,730 ரூபாயாகவும், ஒரு சவரன் 45,840 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் 5,740 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,920 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 6,210 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 49,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி 79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 79,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

x