உச்சம் தொட்ட தங்கத்தின் விலை... இல்லத்தரசிகள் ஷாக்!


தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை நான்காவது நாளாக இன்றும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 6,015 ரூபாய் என வரலாற்று உச்சம் தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 2-ம் தேதி அதிகபட்சமாக கிராமிற்கு நூறு ரூபாய் அதிகரித்திருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும் 160 ரூபாய் ஒரு கிராமிற்கு மட்டும் உயர்ந்திருந்தது. ஒரு சவரனுக்கு மூன்று நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தது.

தங்கம்

நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரண தங்கம் 48,720 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 4வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று கிராமருக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று 6,090 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று 6,015 ரூபாய் என புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து 48,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 175 ரூபாயும், ஒரு சவரனுக்கு 1,400 ரூபாயும் உயர்ந்துள்ளது.

வெள்ளி

வெள்ளியின் விலையும் இன்று உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 78 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 79 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு இணையாக பிளாட்டினத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் பிளாட்டினம் 70 ரூபாய் உயர்ந்து 2,415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பிளாட்டினத்தின் விலை ஒரு கிராமிற்கு 21 ரூபாய் அதிகரித்து 2,436 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

x