சரேலென விலை குறையும் வெங்காயம்... 3 லட்சம் டன் வெங்காயம் விடுவிப்பு! இல்லத்தரசிகள் உற்சாகம்!


பெரிய வெங்காயம்

விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தனது இருப்பில் உள்ள 3 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சின்ன வெங்காயம்

நாடு முழுவதும் தக்காளி, இஞ்சி, கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த 50 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் கையிருப்பில் வெங்காயத்தின் அளவு கடந்த 4 ஆண்டுகளில் மும்மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சந்தையில் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் கையிருப்பில் உள்ள 3 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை வெங்காய விலையை எண்ணி கண்ணீர் விடும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இனி சரேலென வெங்காயத்தை விலை குறைய துவங்கும் என்பதால், இல்லத்தரசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

x