குட்நியூஸ்... சென்னை மெட்ரோவிற்கு 3வது முறையாக கிரீன் ஆப்பிள் விருது!


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கிரீன் ஆப்பிள் விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2023-ம் ஆண்டுக்கான கிரீன் ஆப்பிள் விருது வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் பசுமை அமைப்பு சார்பில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் கிரீன் ஆப்பிள் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த பெருமைமிகு விருதை பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டிற்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு மூன்றாவது முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த விருதை பெற்றுள்ளது.

கார்பன் குறைப்பு பிரிவில் விருது வழங்கப்பட்டது

இதையடுத்து லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் ராஜிவ் கே.ஸ்ரீவத்ஸ்வா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் தற்சார்பு திட்டத்தின் அடிப்படையிலும் பல்வேறு திட்டங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் செளகரியமான அதிவேக பயணத்தை பயணிகளுக்கு வழங்கி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூடுதல் சூரிய சக்தி மற்றும் பல்வேறு விதமான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

x