தங்கம் விலை இன்றைய நிலவரம்... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!


தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,040 என உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நேற்று வரை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 210 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆனால், விலை குறைந்த போது பத்து ரூபாய் மட்டுமே கிராமுக்கு குறைந்திருந்தது. அதிகபட்சமாக கடந்த மார்ச் 2-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 100 ரூபாய் உயர்ந்திருந்தது.

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து இருந்தது. இதனால், ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம்

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.6,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை காரணமாக, தங்கம் வாங்குபவர்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை மிக அதிக அளவில் அதிகரித்து வருவதால், தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும் என நடுத்தர வர்க்க மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி

இதனிடையே வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய் 20 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 20 பைசா குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x