30 ரூபாய்க்கு லிப்ஸ்டிக் வாங்கிய கணவன்; விவாகரத்து கேட்டு ஷாக் கொடுத்த மனைவி... இப்படியும் காரணமா?


விவாகரத்து வழக்கு

உத்தரபிரதேசத்தில் தான் கேட்ட 10 ரூபாய் லிப்ஸ்டிக்கு பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கி வந்த கணவரிடம் இருந்து இளம்பெண் விவாகரத்து கேட்டுள்ளார்.

இந்தியாவில் இளம் தம்பதியிடையே விவகாரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கணவன் மனைவி இடையே உள்ள கருத்து முரண்பாட்டை பொறுமையாக பேசி தீர்க்காமல், உடனடியாக விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்து வருகின்றன. இதில், காதலித்து திருமணம் செய்தவர்கள், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்தவர்கள் என எந்த பாரபட்சமும் இல்லை.

கோப்புப்படம்

விவாகரத்துக்கான காரணம் சரியாக இருக்கும்பட்சத்தில் நீதிமன்றங்கள் விவகாரத்து அளிக்கின்றன. சில வழக்குகளில், இதெல்லாம் ஒரு காரணமா என்று நீதிபதிகளே நினைக்கும் அளவிற்கு சில விநோதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு விநோதமான காரணத்தை கூறி கணவரிடம் இருந்து ஒரு பெண் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவரிடம் 10 ரூபாய் லிப்ஸ்டிக்கை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

கோப்புப்படம்

கடைக்குச் சென்ற கணவர் பல கடைகளில் தேடியும் ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. எனவே ரூ.10 லிப்ஸ்டிக்கு பதிலாக ரூ.30 மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வந்து தன் மனைவியிடம் கொடுத்துள்ளார். தான் கேட்டது 10 ரூபாய் லிப்ஸ்டிக் தான்.. ஏன் 30 ரூபாய் லிப்ஸ்டிக்கை வாங்கி வந்தீர்கள் என்று பெண், கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்ற அவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை. பணம் குறித்த அக்கறை இல்லை. அதனால் விவாகரத்து கோருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் கவுன்சிலிங்கிற்கு செல்லும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x