நகை பிரியர்களுக்கு ஷாக்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு!


தங்கம் விலை

தங்கம் விலையில் நேற்று எந்தவிதமான மாற்றமுமின்றி தொடர்ந்த நிலையில் இன்றைக்கு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.44, 440 விற்பனையாகிறது.

நேற்று தங்கம் ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,280 ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,555 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,440 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து, 6,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து, 48,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு 0.30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 78.50 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து 78,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இறங்கு முகமாக இருந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவது பெண்களையும் ஆண்களையும் கலக்கமடைய செய்துள்ளது.

x