மகளிர் உரிமைத்தொகை: இன்றிலிருந்து இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள்!


மகளிர் உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களைப் பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக தகுதியுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்காக முதல் கட்டமாக கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 76 லட்சம் பெண்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளார்கள். அவற்றைப் பரிசீலிக்கும் பணி தொடங்க உள்ளது.

இந்நிலையில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இரண்டாம் கட்ட முகாம்கள் இன்று ஆக.5ம் தேதி தொடங்கி 16 ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 9:30 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 5:30 மணி வரையிலும் விண்ணப்பங்கள் பதிவு முகாம் நடக்கிறது.

ரேஷன் கடைக்காரர் வழங்கியுள்ள டோக்கன், பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். ஆவணங்களின் நகல் இணைக்க வேண்டாம். ஆதார் எண்ணில் இணைத்துள்ள அலைபேசியை எடுத்து வர வேண்டும். உரிமை தொகை குறித்த தவறான தகவல்களை பரப்பினால் போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

x