உலக தாய்ப்பால் வாரம்... இதையெல்லாம் நிச்சயமா தவிர்க்க வேண்டும்... தாய்மார்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!


தாய்ப்பால்

குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்கள் வராமல் தடுக்க உதவும் ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று தாய்ப்பால் ஆகும். சத்தாண உணவுகள், நிம்மதியான உறக்கம் போன்றவையே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் காரணிகளாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக பிரசவ கால உடல் பலவீனத்தில் இருந்து உடல் மீண்டு வர வேண்டும். இதற்கு சத்தான உணவு மற்றும் தகுந்த ஓய்வு அவசியம். ஆனால், செல்லக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தாய்மார்களுக்கு இருப்பதால் தொடர்ச்சியான ஓய்வு குறித்து நினைத்துகூட பார்க்க முடியாது. ஏதோ குழந்தை தூங்கும் சமயத்தில், நாமும் கொஞ்சம் தூங்கிக் கொள்ள வேண்டியது தான்.

குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய புரதம், கால்சியம், இரும்பு போன்ற சத்துக்கள் தாய்பாலில் இருந்து தான் கிடைக்கிறது என்பதை தாய்மார்கள் மறந்துவிடக் கூடாது. இறைச்சி, பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள், மீன், முட்டை, பீன்ஸ், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை தாய்மார்கள் இந்த சமயங்களில் அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குவதோடு, தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கின்றன.

குழந்தைக்கு பால் புகட்டும் தாய்மார்கள் சத்தாக சாப்பிட வேண்டிய அதேவேளையில், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது மிக, மிக முக்கியமானதாகும். குறிப்பாக அசைவ உணவுகளில் மசாலா மற்றும் காரம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

x