கோடிங்கில் இவர் தான் குயின்... ஆண்டுக்கு 60 லட்சம் சம்பளம்!


முஸ்கன் அகர்வால்

மத்திய அரசின் சிறிய கல்வி நிறுவனத்தில் படித்த மாணவி ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் லின்கிடின் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது அத்தகைய கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இந்த ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றவர் முஸ்கன் அகர்வால். இவரது இறுதி GPA மதிப்பெண் 9.40 ஆகும். தனது கல்லூரி வரலாற்றிலேயே மிக உயர்ந்த சம்பளத்துக்கு தேர்வான பெண் என்ற பெருமையை முஸ்கன் அகர்வால் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய கோடிங் போட்டியான TechGig Geek Goddess 2022ல் கலந்து கொண்ட முஸ்கன் அகர்வால், 69,000 போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசை தட்டி சென்றார். இதன் மூலம், India's top coder என்ற பெருமையை அவர் பெற்றார்.

தொழில்நுட்பத் துறையில் முஸ்கன் அகர்வாலின் சாதனைகள், LinkedIn நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளராகப் பணியைப் பெறுவதற்கு அவருக்கு உதவியது. ஆண்டுக்கு 60 லட்சம் சம்பளத்தில் அவரை அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது. பெங்களூருவில் தற்போது வசித்து வரும் அவர், கடந்த சில வாரங்களாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோடிங் செய்வதில் இந்தியாவின் சிறந்தவராக முஸ்கன் அகர்வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) கடந்த ஆண்டு படித்த மற்றொரு மாணவர் ரூ.47 லட்சம் வருடாந்திர சம்பளத்துக்கு தேர்வானார். மேலும் 2019-23 பேட்ச் மாணவர்களில் சுமார் 86 சதவீதம் பேர், 31 வெவ்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x