தீபாவளியை முன்னிட்டு டன் கணக்கில் தங்கம், வெள்ளி விற்பனை: வணிகர்கள் மகிழ்ச்சி!


தங்கம் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் 30 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகி உள்ளதாகவும், வட மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் தந்தேரா தினத்தில் தங்கம், வெள்ளி விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தங்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தீபாவளி நெருங்க நெருங்க தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையானது. இந்த நிலையில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் 30 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகியுள்ளதாக வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் வட மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் தந்தேரா தினத்தில் தங்கம், வெள்ளி விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 41 டன் தங்கம், 40 டன் வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

x