108 ஆம்புலன்ஸ் ஜன.8-ம் தேதி முதல் ஓடாது!: ஊழியர்கள் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி


108 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் சேவையைக் குறைக்க முயல்வதாகக் கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 8-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்து வந்தபோதும், இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க முயல்வதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டி வருகிறது.

108 ஆம்புலன்ஸ்

ஏற்கெனவே கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் சேவையைக் குறைப்பதைக் கண்டித்து ஜனவரி 8-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்புலஸ் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜனவரி 8ல் வேலை நிறுத்தம்

குறிப்பாக ஏழை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ள ஆம்புலன்ஸ் சேவைகள் தடைபட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.

எனவே தமிழக அரசு அவர்களது கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

x