தி.மலை அருகே அறச்செயலை எடுத்துரைக்கும் 3 கல்வெட்டுகள் கண்டெடுப்பு


தச்சம்பட்டு முருகன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட 2 கல்வெட்டுகள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டில் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தச்சம்பட்டில் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

முருகன் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் 2 கல் வெட்டுகளில் ஒன்று ஒரு குறுநில தலைவனும், அவரது மனைவி யும் உள்ள சிற்பத்தின் கீழ் 3 வரிகளும், அதனருகே மற் றொரு கல்வெட்டும் உள்ளன.

தச்சம்பட்டு முருகன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட 2 கல்வெட்டுகள். (அடுத்த படம்) மணலூர்பேட்டை சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆங்கில கல்வெட்டு. (கடைசிப்படம்) திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரயில்வே பாலம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்ட ஆங்கில கல்வெட்டு.தென்னாற்காடு மாவட்டத்தின் ஆட்சியராக நாப்பு துரை இருந்துள்ளார்.

குறுநில தலைவன் என கருதப்படுகிற ஆண், பெண் உள்ள சிற்பம் கீழே உள்ள கல்வெட்டில், மணலூர்பேட்டையில் இருக்கும் கெங்கை கோத்திரம் என உள்ளது. மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்ப நாயக்கர், மனைவி சூப்பச்சியம்மனுக்காக பச்சை யம்மாள் மகனார் முனியகண்ணன் குளமும், தர்மசத்திரமும் கட்டிய தாக குறிப்பிடுகிறது. இந்த 2 கல்வெட்டுகளும் சுமார் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

மணலூர்பேட்டை சாலையில் கண்டெடுக்கப்பட்ட
ஆங்கில கல்வெட்டு.

மணலூர்பேட்டை சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆங்கில கல்வெட்டில், KNAPP REST HOUSE for Travellers & Animals in honour of Our popular Collector A.R.KNAPP Esqn ICS நாப்பு துரை விடுதி – என பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ததில் நாப்பு துரை என்பவர் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் ஆட்சியராக (1909-1910) இருந் துள்ளார்.

இவர், இங்கிலாந்து நாட்டில் 1870-ல் பிறந்தவர். மாவட்ட ஆட்சியர் உட்பட் பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து வருவாய் துறையில் (Board of Revenue) செயலாளராக இருந்துள்ளார். மெட்ராஸ் எம்.எல்.சியாக இருந் தவர். இறுதியாக, கடந்த 1954-ல் கால மானார்.

இவர் காலத்தில், பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வகுத்துள்ளார். அதனால்தான் இவரை போற்றும் விதமாக கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை - மணலூர் பேட்டை வழி தடத்தில் பயணி களின் நலனுக்காக தங்குமிடத்தை நாப்பு துறை கட்டியுள்ளார். பயணிகளுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் தங்குமிடத்தில் இடமுண்டு. மாவட்ட ஆட்சியரின் தர்ம செயல்பாட்டை எடுத்து காட்டுகிறது. இவரது மற்றொரு தர்ம செயலின் தடயமும் திரு வண்ணாமலையில் உள்ளது.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம்
முன்பு ரயில்வே பாலம் கட்டும் பணிக்காக
அகற்றப்பட்ட ஆங்கில கல்வெட்டு.

கோட்டாட்சியர் அலுவலக சுற்று சுவர் முன்பு KNAPP PATH in honour of our popular collector A R KNAPP Esq ICS நாப்பு துரை பாதை 1909 –தாசில்தார்/சேர்மேன் தாஜுதீன் சாகிப், எ. ராஜன், LFO என்ற கல்வெட்டு இருந்தது. இக்கல்வெட்டு இருந்த வழித்தடம் 1909-ல் நாப்பு சாலையாக இருந்துள்ளது. திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையாக தற்போது அழைக் கப்படுகிறது. ரயில்வே பாலம் கட்டுமானம் பணியின்போது அகற்றப்பட்டது.

நாப்பு துரை கல்வெட்டிலும் in honour of our popular collector என்பது மக்கள், ஊர்காரர்கள் வைத்த பெயராகலாம். அந்த ளவுக்கு அவர் மக்கள் நலனுக் காக செயல்பட்டுள்ளார் என தெரிகிறது. அதன் வெளிப்பாடே இக்கல்வெட்டுகள். தச்சம்பட்டில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டி, தர்மசத்திரம் கட்டி மக்கள் பணி செய்தார் ஒரு ஊர் தலைவன், 100 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுக்கும், விலங்குகளுக்கும் தங்குமிடம் கட்டிக் கொடுத்துள்ளார் ஒரு வெள்ளக்கார ஆட்சியர்ர். இந்த கல்வெட்டுகள் இரண்டும் அறச்செயலை குறிப்பிடுவதால் முக்கியமான கல்வெட்டு வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது” என தெரிவித் துள்ளார்.

x