டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்... விவசாயிகளுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!


விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இன்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இதனை தொடர்ந்து மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகிருந்தது. இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இன்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

விவசாயிகள் போராட்டம்

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கெனவே நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், 3வது கட்டமாக இந்த பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இது குறித்து பேசிய பஞ்சாப் கிசான் சங்கர்ஷ் மஸ்தூர் சங்கத்தின் தலைவர் சர்வான் சிங் பாந்தர், "பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. சண்டிகரில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாய சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x