காதலர்கள் குஷி... தங்கத்தின் விலை திடீர் சரிவு... சவரனுக்கு ரூ.480 குறைவு!


தங்கநகை

ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்றும் சரிந்து ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காதலர் தினமான இன்று தங்கத்தின் இந்த விலை குறைவு பரிசுப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளும் காதலர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சவரன் 47 ஆயிரம் ரூபாயை கடந்து உச்சாணி கொம்பில் இருந்த தங்கத்தின் விலை இன்று 46 ஆயிரம் ரூபாயாக விலை குறைந்துள்ளதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரிதாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் இன்று மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்துள்ளது.

அதிரடியாக விலை உயரும் தங்கம் இறங்கும்போது மட்டும் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று தான் இறங்கும். ஆனால் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் அதிரடியாக குறைந்த நிலையில் இன்று மேலும் அதிரடியாக 480 ரூபாய் குறைந்துள்ளது தங்க நகைகளை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 46,480 ரூபாயாக இருந்தது. அதில் இன்று 480 ரூபாய் குறைந்து 46,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 5,810 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 5,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்று கிராம் 77 ரூபாய் விற்ற நிலையில் இன்று அதில் ரூ.1.50 குறைந்து, 75.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x