விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது கணவர் ராஜாராம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தனித்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஆனாலும் அவர்கள் மூதாட்டியை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இவரது குடிசை வீடு ஒரு வருடத்திற்கு முன்பாக முழுவதுமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது. இதையடுத்து மூதாட்டி தனது உடமைகளுடன், அரசு வழங்கிய கழிப்பறையில் தஞ்சமடைந்தார்.
மூதாட்டி வசித்து வரும் இடத்திற்கு வீட்டு மனைப்பட்டா இல்லாததால் அரசு சார்பில் எவ்வித உதவியும் செய்ய விதிகள் இடம் தரவில்லை.
இதையடுத்து விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா கேட்டுக்கொண்டதன் பேரில் சமூகநல அமைப்புகள் ரூ.1 லட்சம் மதிப்பில் தற்காலிகமாக ஆஸ்பெட்டாஸ் ஷீட் அமைத்து மூதாட்டிக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.