குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!


அரசு விரைவு பேருந்து

வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு விரைவு பேருந்து

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை (நவ.4), ஞாயிற்றுக்கிழமை (நவ.5) உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தினசரி இயங்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்குமாக 300 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், சொந்த ஊா்களிலிருந்து திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x