பயணிகளே தவறவிடாதீங்க: தீபாவளி சிறப்பு ரயிலுக்கு இன்று முன்பதிவு செய்யலாம்!


தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே 4 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், ”தீபாவளி பண்டிகை காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு பண்டிகை சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் ரயில் நிலையம்

இதே ரயில் மறுமார்க்கமாக நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயிலில் ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, 5- 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 11- படுக்கை வசதி பெட்டி, 2 பொது பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் 2ம் வகுப்பு பெட்டிகள் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ரயில் நிலையம்

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன் பதிவு தொடங்கிய சற்று நேரத்திலேயே பெருவாரியான இருக்கைகள் நிரம்பிவிட்டது குறிப்பிடத் தக்கது.

x