குன்னூர் | 150-வது ஆண்டு நினைவு பழக்கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா


குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு 64-வது பழக்கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக பூங்காவை பொழிவுபடுத்துவதற்காக 5,000 தொட்டிகளில் மலர் செடிகளை வைத்து அலங்கரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை பகுதிகளில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வரும் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் தோட்டக்கலை துறை சார்பில் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிககள் வேகமெடுத்துள்ளன. சுற்றுலா பயணிகள் கவரும் விதமாக சிம்ஸ் பூங்காவில் 5,000 தொட்டிகளில் பல வண்ண மலர் செடிகளை வைத்து அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தற்போது சிம்ஸ் பூங்கா சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டியுள்ளது. ஆண்டுதோறும் 2 நாட்கள் நடைபெரும் இந்த பழக்கண்காட்சி இந்த ஆண்டு சிம்ஸ் பூங்காவுக்கு 150-வது ஆண்டு என்பதால் 3 நாட்கள் பழக்கண்காட்சியை நடத்த தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது. இதையொட்டி வழக்கத்தை விட கூடுதலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.