மாரடைப்புக்கான காரணங்கள்... மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


அமைச்சர் மன்சுக் மாண்டவியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடக் கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ள நிலையில், அதைக் குறிப்பிட்ட அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார்.

’’ஐசிஎம்ஆர் இது குறித்த விரிவான ஆய்வை நடத்தியது. அதன்படி கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான வேலை செய்யக் கூடாது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க, கடினமான உடற்பயிற்சி, வேகமாக ஓடுவது, ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஓரிரு ஆண்டுகள் இதுபோல கடுமையாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

x