தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!


அரசு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக தமிழக முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்து கழக தகவல் வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்துகள்

தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை , பள்ளித் தேர்வு விடுமுறைகளுக்கு சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று வர வசதியாக சிறப்பு பேருந்துகளை அரசு சில ஆண்டுகளாக இயக்கி வருகிறது.

நவம்பர் 9,10, 11 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 6300 பேருந்துகளுடன் 4675 என மொத்தமாக 10,975 பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுகிறது. மற்ற ஊர்களுக்கு 5920 என மொத்தம் 16,795 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு பேருந்துகள்

இதற்காக சென்னையில் மட்டும் ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ரெட்ஹில்ஸ், பொன்னேரி, கும்முடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள்

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x