குன்னூர்: காட்டேரி பூங்காவில் 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு


குன்னூர்: குன்னூர் காட்டேரி பூங்காவில் 2வது சீசனுக்காக 2 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையோரத்தில் உள்ளது. தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவில் இந்தாண்டு கோடை சீசனுக்கான மலர் செடிகள் நடவு பணி நடைபெற்றது. இதில், முதற்கட்டமாக ஐரிஸ் குளோரபைட், டேபிள் ரோஸ் உட்பட பல்வேறு மலர் மலர் நாற்றுக்கள பூங்கா வளாகத்தில் நடவு செய்யப்பட்டு வருகிறது. இந்நாண்டு இரண்டாம் சீசனுக்கு 2 லட்சம் மலர் நாற்றுக்கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்படுகிறது.

இதில், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜினியா, பெகோனியா, லூபின், டெல்பினியம் போன்ற 20-க்கும் மேற்பட்ட மலர் வகை செடி ரகங்கள் நாற்றுக்கள் வரவழைத்து, நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் 2வது சீசனுக்கு மலர்கள் பூத்து குலுங்கும் என்று தோட்டக்கலைத் துறையினர் கூறினர்.

x