தங்கம் விலை கிடு கிடு உயர்வு... ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்தை நெருங்குவதால் பெண்கள் கவலை!


ஆபரண தங்கம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்குவோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று வர்த்தகம் துவங்கியதில் இருந்தே, தங்கம் வாங்கும் போக்கும், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்றும் வர்த்தக நேர துவக்கத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது.

தங்கம்

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று ரூ. 46,760 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.46,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,845 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.5,860 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய் 70 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்

கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களின் காரணமாக, திருமணங்கள் குறைவாக இருந்ததால் தங்கத்தின் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது திருமணக் காலம் தொடங்கி இருப்பதால் ஏராளமானோர் தங்கம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ஆபரண தங்கம் 6 ஆயிரம் ரூபாயை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

x