ஆயுத பூஜை நாளில் தங்கம் விலை சரிவு! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி


தங்கம்

கடந்த சில தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது நகைபிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,670 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 45,360 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,660 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,280 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 6,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 49,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, 78.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் குறைந்து 78,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

x